இடையகோட்டையில் இன்று மின்தடை

 

ஒட்டன்சத்திரம், ஜூலை 27: ஒட்டன்சத்திரம் வட்டம் சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (ஜூலை 27ம் தேதி, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சின்னக்காம்பட்டி, இடையகோட்டை, குத்திலுப்பை, ஐ.வாடிப்பட்டி, கொங்கபட்டி, நவகானி, இடையன் வலசு, இ.கல்லுப்பட்டி, வலையபட்டி, கொ.கீரனூர், சாமியாடி புதூர், நரசிங்கபுரம், ஜவ்வாதுபட்டி, பாறைப்பட்டி, அண்ணாநகர், அய்யம்பாளையம், எல்லப்பட்டி, மார்க்கம்பட்டி, மாம்பாறை, பெருமாள் கவுண்டன்வலசு, கக்க நாயக்கனூர், நாரப்பநாயக்கன வலசு, அத்தப்பன்பட்டி, புல்லா கவுண்டன் வலசு, குளிப்பட்டி, வலையபட்டி, ஜோகிபட்டி, நாகப்பன்பட்டி, ஓடைப்பட்டி, கோமாளிப்பட்டி, சோழியப்பகவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது