ஆஸ்கர் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படம் 16 பிரிவுகளில் போட்டி

சென்னை: ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ ஆகிய படங்களுக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்கு பரிந்துரை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியா சார்பில் குஜராத்தி மொழி படமான ‘செல்லோ ஷோ’ தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில், ஆஸ்கர் விருதின் பொதுப்பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் போட்டியிடுகிறது. சிறந்த மோஷன் திரைப்படம் மற்றும் இயக்கம், நடிகர்கள், துணை நடிகர், துணை நடிகை, ஒளிப்பதிவு, ஒரிஜினல் திரைக்கதை, ஒரிஜினல் பாடல், ஒரிஜினல் இசை, படத்தொகுப்பு, ஒலி, தயாரிப்பு வடிவமைப்பு, ஆடை அலங்காரம், மேக்கப், ஹேர்ஸ்டைல், விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய 16 பிரிவுகளில் இப்படம் போட்டியிடுதாக, சமூக வலைத்தளங் களில் தகவல் வெளியாகி இருக்கிறது. …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்