ஆலய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

நாகர்கோவில், டிச. 21: குமரி மாவட்ட ஆலய ஊழியர் சங்க தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் அஜிகுமார், பொருளாளர் அருள்சந்தர் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு அரசு திருக்கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு பணத்தை வழங்கியும் ஊழியர்களின் ஊதிய உயர்வை வழங்க நிர்வாகம் முன்வரவில்லை. மதுரை உயர்நீதிமன்றகிளை 12 வாரங்களுக்குள் அமல்படுத்த ஆணை பிறப்பித்தும் திருக்கோவில்கள் நிர்வாகம் அமல்படுத்த தயாராகாமல் 20 மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளது.

எனவே பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 வருடங்களாகியும் ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை வழங்க மறுக்கும் திருக்கோயில் நிர்வாகத்தை கட்டுபடுத்தி உடனடியாக ஓய்வுபெற்ற அனைவருக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும். அலுவலகங்கள் உட்பட எல்லா பகுதிகளிலும் தற்பொழுது பணியாற்றும் ஊழியகளின் தகுதிகளின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவும், காலி இடங்களை நிரப்பவும் வேண்டும். வெளிநபர்களை தேர்வு செய்து ஊழியர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை தடுப்பதை ரத்து செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்