ஆலத்தூர் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி பிறந்தநாள் விழா

பாடாலூர், டிச.18: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஆலத்தூர் ஒன்றியக்குழு தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தியின் 79வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கொளக்காநத்தம் கிராமத்தில் நடந்த விழாவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஆலத்தூர் ஒன்றியக்குழு தலைவருமான கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருடன் சேர்ந்து பிறந்த நாள் கேக் வெட்டினார். பின்னர் அவருக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து திமுகவினர், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் (எம்எல்ஏ), திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனங்களின் சேர்மன் வரதராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், மதியழகன், பெரம்பலூர் ஒன்றியக்குழு தலைவர் மீனா அண்ணாதுரை, வேப்பூர் ஒன்றியக்குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் களத்தூர் கார்மேகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராகவன், பாலமுருகன், அகிலா ராமசாமி, அன்புச்செல்வன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மதியழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன், ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசு, சத்யா சாமிதுரை, கிளைக் கழக செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், இளைஞரணி பிரபு, பகுதி மாணவரணி துணை அமைப்பாளர் நந்தகுமார், ஒப்பந்ததாரர்கள் அமர்நாத், வெங்கடேசன், நாரணமங்கலம் ரவிசேகர், மற்றும் மாவட்ட, நகர, பேரூர் ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் உள்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்