ஆறுமுகநேரியில் 110 கிராம் கஞ்சாவுடன் வாலிபர் கைது

ஆறுமுகநேரி, மார்ச் 7: ஆறுமுகநேரியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் பள்ளி அருகே உள்ள பிள்ளையார் கோயில் பகுதியில் பைக்கில் வந்த வாலிபரை மடக்கினர். சோதனையில் அவரிடம் விற்பனைக்காக 110 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திக் ராஜா(21) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து எஸ்ஐ அரிக்கண்ணன் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்காதர் விசாரணை நடத்தி கார்த்திக் ராஜாவை கைது செய்தார். அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சா, எடை மிஷின், 3 செல்போன்கள், ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்