ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நிறைவு: எய்ம்ஸ், அப்போலோ டாக்டர்களிடம் ஏப்.5ம் தேதி மீண்டும் விசாரணை

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நிறைவு பெற்றதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். மேலும், எய்ம்ஸ், அப்போலோ டாக்டர்களுக்கு ஏப்.5ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும்.  முன்னாள் முதல்வர் ெஜயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த 21ம் தேதி ஜெயலலிதாவுடன் தொடர்புடையவர்களை அழைத்து விசாரணை நடத்தியது.  அப்போது, ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இளவரசி ஆகியோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. ஓபிஎஸ்-சிடம் மொத்தம் 9 மணி நேரம் இரண்டு நாள் விசாரணை நடத்தப்பட்டது.   விசாரணையின் போது சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணையில் 34 கேள்விகளும், அப்போலோ தரப்பு வழக்கறிஞர் 11 கேள்விகளும், விசாரணை ஆணையம் தரப்பில் 120 கேள்விகள் என 165 கேள்விகள் கேட்கப்பட்டது. பெரும்பாலான கேள்விகளுக்கு ஓபிஎஸ் தெரியாது என்ற பதிலையே கூறி வந்தார்.  இதையடுத்து, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டிய அனைத்து சாட்சிகளையும் விசாரித்துவிட்டதாக அறிவித்தது. மேலும், அப்போலோ தரப்பும், சசிகலா தரப்பும் யாரேனும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றால் அதற்கான பட்டியலை அடுத்த வாரம் புதன்கிழமை வழங்கலாம் எனவும், அது தொடர்பான ஆலோசனையும் நடைபெறும் எனவும், குறுக்கு விசாரணை நடைபெறும் பட்சத்தில் ஆணையம் தனது அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் என கடந்த 22ம் தேதி அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று நடந்த ஆறுமுகசாமி ஆணையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்தார். வரும் ஏப்ரல் 5, 6 மற்றும் 7 தேதிகளில் அப்பல்லோ மருத்துவர்கள் 9 பேர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர். ஏற்கனவே  அளித்த சாட்சியத்தினை எய்ம்ஸ் மருத்துவ குழுவிற்கு இந்த 9 மருத்துவர்களும்  விளக்குவதற்காக, விசாரணையில் ஆஜராக வேண்டும் என ஆணையத்திடம் அப்போலோ தரப்பு  வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்