ஆன்லைனில் திருட்டு திகார் ஜெயில் கைதிகள் விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவரின் தொலைபேசி எண்ணிற்கு தேசிய வங்கி எண்ணுடன் பான்கார்டு இணைக்க வேண்டும் என குறுந்தகவல் வந்துள்ளது. இதையடுத்து சங்கரநாராயணன், அக்குறுந்தகவலில் வந்த லிங்க்கை அழுத்தியவுடன் அவரது வங்கி கணக்கில் இருந்து ₹2.30 லட்சம் எடுக்கப்பட்டது.விருதுநகர் சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் மோசடி செய்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த புரமோத் குமார், பினோத்குமார் ஆகியோர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. போலீசார் திகார் சென்று இருவரையும் அழைத்து வந்து விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்….

Related posts

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

பிரசித்திபெற்ற முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கும் சேலைகள் மறு விற்பனை: பக்தர்கள் அதிர்ச்சி

வைகாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்