ஆத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மகாசபை கூட்டம்

ஆறுமுகநேரி: ஆத்தூரில் கஸ்பா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மகாசபை கூட்டம் நடந்தது. சங்கத்தலைவர் ஹேமமாலினி தலைமை வகித்தார். துணைத்தலைவர் புகாரி முன்னிலை வகித்தார். செயலாளர் ஸ்டெல்லா தமிழ்ச்செல்வி வரவேற்றார். இதில் வரவு- செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டதோடு வரும் நிதியாண்டுக்கான உத்தேச வரவு- செலவு நிர்ணயிக்கப்பட்டது. கூட்டத்தில் சங்கத்தின் பங்குமூலதனத்தை ரூ.80 லட்சமாக உயர்த்துவது. கையிருப்புத்தொகையை உயர்த்த துணைவிதியை திருத்தம் செய்வது. வருடம் தெரியாமல் பிரிக்கப்படாத லாபத்தொகையை சேமநிதியில் சேர்ப்பது. பணியாளர்களின் பணிநிலைத்திறன் சிறப்பு துணைவிதியில் திருத்தம் செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செல்வக்கனி முருகேசன், மாதவன், பிரேமா, துரைராஜ், துரைச்சாமி, ரமணிபாய், செல்வன்புதியனூர் ஊர்த்தலைவர் அரிபுத்திரன், கீழக்கீரனூர் குணசேகரன், முருகன், சண்முகராஜ் மற்றும் சங்கப்பணியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை