ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு நலத்திட்ட உதவி தொகை

காரைக்கால்,பிப்.22: திருப்பட்டினத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு உதவி தொகை நாக தியாகராஜன் எம்எல்ஏ வழங்கினார். காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் திருமண உதவித்தொகை, குழந்தை பிறப்பிற்கான உதவி தொகை, வீடு கட்டுவதற்கான உதவித்தொகை கலப்பு திருமணத்திற்கான உதவித்தொகைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் கலந்து கொண்டு 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்