ஆடி வெள்ளி சிறப்பு பூஜை அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

 

ஊட்டி, ஜூலை 29: ஊட்டியில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம். அதுவும் வெள்ளிக் கிழமைகளில் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்குவது வழக்கம். ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமையிலும் அனைத்து அம்மன் கோயில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், நேற்று ஆடி மாதம் வெள்ளிக்கிழமை என்பதால், அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஊட்டி மாரியம்மன் கோயில், குன்னூர் தந்திமாரியம்மன் கோயில், பிங்கர்போஸ்ட் பிரத்தியங்கரா அம்மன் கோயில், மஞ்சூர் மாரியம்மன் கோயில் உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மலைவாழ் குழந்தைகளுக்கு உதவி

போர்வெல் மோட்டாரில் வயர் திருட்டு

ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் ஆய்வு