ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் சீல் வைக்கப்பட்ட டீ கடையை திறக்க அனுமதிக்க வேண்டும் எம் ஆர் காந்தி எம்எல்ஏ கலெக்டரிடம் கோரிக்கை

நாகர்கோவில், மார்ச் 7: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.ஆர்.காந்தி தலைமையில் ஆசாரிபள்ளத்தில் இயங்கி வரும் பிளசன்ட் நகர் மகளிர் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் எங்களது சுய உதவி குழு சார்பில் டீ கடை நடத்தி வந்தோம். இந்த கடை மூலம் 12 குடும்பத்தினர் பயன் அடைந்து வந்தோம். கடந்த நவம்பர் மாதம் கல்லூரி நிர்வாகம் அந்த கடையை சீல் வைத்தது. இதனால் 12 குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். எனவே எங்களது வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் டீ கடையை திறக்க உரிய அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது