ஆக்கூர் ஆதிநாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

செம்பனார்கோயில், மே 23: ஆக்கூர் ஆதிநாராயண பெருமாள் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற ஆதிநாராயண பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி ஆதிநாராயணப் பெருமாள், ராஜகோபால பெருமாள், கோதண்டராமர் உள்ளிட்ட சாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள்பொடி, திரவியபொடி ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆதிநாராயணப் பெருமாள், செங்கமலவல்லி தாயாருக்கும். ராஜகோபாலபெருமாள், பாமா ருக்மணிக்கும், கோதண்டராமர், சீதாதேவிக்கும் ஒரே நேரத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கருடாழ்வார் உள்ளிட்ட சாமி சன்னதிகளிலும் அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள், சாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். முன்னதாக ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளிட்ட சாமி சன்னதிகளிலும் அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related posts

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தேசிய விழிப்புணர்வு கருத்தரங்கு

புதியம்புத்தூர் அருகே யூனியன் பள்ளியில் கோள்கள் திருவிழா

திருச்செந்தூரில் நடந்த ஜமாபந்தியில் உடன்குடியில் அடிப்படை வசதி நிறைவேற்ற வலியுறுத்தி மனு