ஆக்கிரமிப்பு அகற்றம்

 

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி ஊராட்சி சென்ராயன்கொட்டாய் பகுதியில், பெரிய ஏரியில் இருந்து நாகவதி அணைக்கு நீர் செல்லக்கூடிய ஓடை உள்ளது. வேடம்பள்ளம் பகுதியில் ஓடையை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக பொதுமக்கள் சார்பில் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதையடுத்து பிரச்னைக்குறிய நிலம் அளவீடு செய்யப்பட்டு, ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் ஆகியோர் நேற்று, பொக்லைன் இயந்திரத்துடன் நேரில் சென்றனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து ஒன்றிணைந்தனர்.

மேலும், ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை மட்டுமே அகற்ற வேண்டும். சாலை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு தாசில்தார் ஓடை ஆக்கிரமிப்புகளை மட்டுமே அகற்ற வந்துள்ளோம். சாலை போடுவதற்கு நாங்கள் வரவில்லை என கூறினார். இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்கிறோம் என ஆக்கிரமிப்பு செய்திருந்த விவசாயிகள் தெரிவித்ததனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். தொப்பூர் எஸ்ஐ சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்