அவதூறு பரப்பினால் சைபர் கிரைமில் புகார் அளிக்கலாம்: எஸ்பி அறிவிப்பு

 

விருதுநகர், மார்ச் 20: உண்மைக்கு புறம்பான செய்திகள் பற்றி சைபர் கிரைமில் புகார் அளிக்கலாம் என்று எஸ்பி அறிவித்துள்ளார். விருதுநகர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்ட தகவல்: நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 16ல் வெளியான நிலையில் மாவட்டத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எஸ்எம்எஸ் மூலமாகவோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ, உண்மைக்கு புறம்பான செய்தியை எழுத்து வடிவிலோ, காட்சி வடிவிலோ அல்லது ஒலி, ஒளி வடிவிலோ தவறான உள்நோக்கில் வெளியிட்டால் சைபர் கிரைம் போலீசார் மூலம் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பான புகார்களை பொதுமக்கள், தொடர்புடைய நபர்கள் புகார் அளிப்பதற்கென்று தனிப்பட்ட தொலைபேசி எண் 93638 79190 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. உண்மைக்கு புறம்பான செய்தியின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் புகார் அளிக்கலாம். புகார்கள் தெரிவிப்போர் பற்றிய விபரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டாசு திரி பதுக்கிய இருவர் கைது

இன்ஸ்டாகிராம் நண்பர் யார்? குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி