அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நாகை கலெக்டர் ஆபீசில் நடந்தது

நாகை: புயல், மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் அறிவிக்காததை கண்டித்து நாகையில் அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புரெவி புயலால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் அறிவிக்காத தமிழக அரசை கண்டித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தப்பு அடித்தும், ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுப்பு செய்து 1 மாதம் ஆகியும் நிவாரணம் வழங்கவில்லை.  பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.32 ஆயிரம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். புரெவி புயலால் பாதித்த பயிர்களுக்கு  தமிழக அரசு காலதாமதம் இன்றி நிவாரணம் அறிவிக்க வேண்டும். வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளை வஞ்சிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.  முன்னதாக பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பச்சைக்கொடி மற்றும்  மழையால் அழுகிய நெற்பயிரை கையில் ஏந்தி, தெத்தி பிரிவு சாலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு  கலெக்டர் அலுவலகம் வந்தனர். …

Related posts

மெரினா கடற்கரை- பெசன்ட் நகர் இடையே ரோப் கார் திட்டப்பணிகளை விரைவில் தொடங்க திட்டம்

டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து

மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது தமிழ்நாட்டில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு: அரசியல் கட்சி அலுவலகம், பொது இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு