அறிவியல் கருத்தரங்கம்

 

மதுரை, மே 19: மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பிரேக் துரு சயின்ஸ் சொசைட்டி அமைப்பு சார்பில் 2 நாள் அறிவியல் கருத்தரங்கம் நடந்தது. ஹில்டா மேரி வரவேற்றார். தலைமையாசிரியர் ரவி வாழ்த்தினார். பேராசிரியர் சீனிவாசன் துவக்க உரையாற்றினார். மாணவர்களுக்கு எளிய இயற்பியல் சோதனைகளை ஆசிரியர் சிவகுமார் செய்து காட்டினார். பிரேக் துரு சயின்ஸ் அமைப்பை சேர்ந்த யோகராஜன் அறிவியல் வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார். 2ம் நாள் நிகழ்ச்சியில் யோகராஜன், பேராசிரியர்கள் காயத்ரி, நித்யா, ஹெலன் பேசினர்.

கருத்தரங்க நிறைவு விழாவில் சங்கரன்கோவில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகக்கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் கலந்து கொண்டு பேசுகையில், ‘அறிவியல் சிந்தனைகளிலிருந்து விலகிச்செல்லும் தற்கால மாணவர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் விளக்கி கூறப்படும் அடிப்படை அறிவியல் கருத்துக்கள் அவர்களை விஞ்ஞானிகளாக மாற்றும். மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடவும், நமது நாட்டை வல்லரசு நாடாக மாற்றவும் உதவும்’ என்றார். முகாமில் பங்கேற்ற எம்.சி, சேதுபதி பள்ளிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் பார்த்தசாரதி அறிவுறுத்தலின் பேரில், தலைமையாசிரியர் ரவி, ஆசிரியர்கள் சொக்கலிங்கம், பாலாஜி ராம் செய்திருந்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு