அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து: தீயணைக்கும் பணி தீவிரம்

புதுக்கோட்டை: அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் பழைய பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீ, அருகிலுள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கும் பரவியது. அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் மதன்குமார் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் குடோன் இயங்கி வருகிறது. பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீ அருகிலுள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கும் பரவியதால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக காணப்படுகிறது. நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் அதிகமான குப்பைகள் குவிந்திருப்பதால் தீ பரவி பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீ பற்றிய பிளாஸ்டிக் குடோனின் அருகில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் இரண்டு பெட்ரோல் பங்குகள் உள்ள நிலையில் தீ மளமளவென பற்றி எரிந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்த நிலையில் தற்போது தீயணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது….

Related posts

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

20,332 பள்ளிகளில் இணைய வசதி கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்