அருமனை மேலத்தெரு முத்தாரம்மன் கோயில் கொடை விழா

நாகர்கோவில், மார்ச் 16: அருமனை மேலத்தெரு முத்தாரம்மன் கோயில் கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற புதன்கிழமை வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினசரி காலை 6 மணிக்கு உஷ பூஜை, 7 மணிக்கு கோயில் சம்பந்தமான சடங்குகள், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து பஜனை, நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு கரம் எடுத்தல், மாலை 5 மணிக்கு வில்லிசை நடைபெறுகிறது. புதன்கிழமை காலை 6 மணிக்கு கோயில் சம்பந்தமான சடங்குகள், 8 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு அம்மன் பவனி வருதல், மாலை 4.30 க்கு பொங்காலை, உச்சக்கொடை நடைபெறுகிறது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு