அருப்புக்கோட்டையில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி

அருப்புக்கோட்டை, ஜன. 12: அருப்புக்கோட்டையில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அருப்புக்கோட்டை எஸ்பிகே ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில், புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் காற்று மாசு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவந்தனர். மேலும். புகையில்லாமல் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை. பொதுமக்களிடம் வழங்கினர். இந்தப் பேரணி எஸ்பிகே பள்ளியில் தொடங்கி, மெயின் பஜார் உள்ளிட்ட நகரில் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் ராமராஜ், உதவிபொறியாளர் அப்துல்கபூர், நகராட்சி கமிஷனர் அசோக் குமார், உதவி பொறியாளர் முரளி, தாசில்தார் அறிவழகன், பள்ளி தலைவர் சிவராமகிருஷ்ணன், பள்ளி செயலாளர் கவுன்சிலர் மணி முருகன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

பல்வேறு வழக்குகளில் தொடர்பு: நீதிமன்றத்தில் வாலிபர் சரண்

தூத்துக்குடி உப்பளத்தில்மின்மோட்டார் திருட்டு

சி.வ.அரசு பள்ளியில் ₹2 கோடியில் புதிய வகுப்பறை கட்டுமான பணிகள் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு