அரிவாளுடன் சுற்றியவர் கைது

சிவகாசி, மார்ச் 28: சிவகாசி அருகே பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பஸ் ஸ்டாபில் சப் இன்ஸ்பெக்டர் மொய்தீன்அப்துல்காதர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் அப்பகுதியில் செல்லும் பொதுமக்களை மிரட்டி கொண்டு இருந்தார். போலீஸ் வருவதை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் புதுக்கோட்டையை சேர்ந்த முனியாண்டி மகன் மணிகண்டன் (20) என தெரியவந்தது.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி