அரியலூர் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு பால்குட ஊர்வலம்

அரியலூர், ஏப்.15: தமிழ்புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அரியலூர் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரிய நாயகி அம்மனுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று பால்குடம் எடுத்த தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அரியலூர் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தமிழ் வருடபிறப்பு அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், தமிழ் வருடபிறப்பையொட்டி நேற்று காலை அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டிஏரிக்கரையில் உள்ள விநாயகர் கோயிலிலிருந்து பால்குடம், பால்காவடி, முளைப்பாரி மற்றும் அலகு குத்தி வந்த பக்தர்கள், கடைவீதி வழியாக சென்று கிராமத்தின் முக்கிய வீதிகளை வலம் வந்தனர்.

தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. பின்னர், இரவு வானவேடிக்கையுடன் அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது. பால்குட விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு