அரியலூர் அருகே அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!: கிராம மக்கள் வியப்பு..!!

அரியலூர்: அரியலூரில் ஒரு கிராமத்திற்கு பேருந்து போக்குவரத்தை துவக்கி வைத்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதே பேருந்தை நீண்ட தூரம் ஓட்டி சென்று கிராம மக்களை வியக்க வைத்தார். அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த ஆனந்தவாடி கிராமத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்து விடப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று கொடி அசைத்து பேருந்தை துவக்கி வைத்தார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் பேருந்தில் ஏறிய அவர், பேருந்தை இயக்க ஆரம்பித்தார். சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை அமைச்சர் சிவசங்கர் ஓட்டிச் சென்றார். கிராமத்திற்கு பேருந்து போக்குவரத்து துவக்க நிகழ்ச்சியில் அமைச்சரே அந்த பேருந்தை ஓட்டிச் சென்றது கிராம மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அமைச்சர் ஓட்டிச் சென்ற பேருந்தில் அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா, ஒன்றிய செயலாளர்களும் பயணம் செய்தனர். இந்த அரசு பேருந்து ஜெயங்கொண்டத்தில் இருந்து உடையார்பாளையம் வழியாக ஆனந்தவாடி கிராமத்திற்கு தினமும் 2 முறை வந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

நடுக்கடலில் படகு கவிழ்ந்தது 11 மணி நேரம் உயிருக்கு போராடிய 3 மீனவர்கள்

மனைவி தற்கொலை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கணவன் சாவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாஜவின் அழுத்தத்தால் அதிமுக புறக்கணிப்பா? எடப்பாடி பழனிசாமி விளக்கம்