அரியலூரில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

அரியலூர், மார்ச் 8: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாற்றுத்திறனாளிகளிக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். இதில் 12 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கையின் மீது மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டு மனுக்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் இக் கூட்டத்தில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், முடநீக்கு வல்லுநர் ஜெயராமன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி