அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் உலக கை கழுவுதல் நிகழ்ச்சி

 

கோவை, மே 6: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு ‘‘கை கழுவுதல்’’ நிகழ்ச்சி நடந்தது.  ஒவ்வொரு ஆண்டும் மே 5-ம் தேதி உலக கை சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடுமையான நோய் தொற்றுக்களை தடுப்பதில் கை சுகாதாரத்தின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் சார்பில் கை கழுவும் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கொரோனா தாக்கத்திற்கு பிறகு அடிக்கடி கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வது மற்றும் சோப்புகளை பயன்படுத்தி சுத்தம் செய்தல் போன்றவை பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்