அரசு பள்ளி மாணவிகள் சிலம்பம் போட்டியில் சாதனை திருவண்ணாமலை அடுத்த கொளக்குடி

திருவண்ணாமலை, டிச.9: திருவண்ணாமலை அடுத்த கொளக்குடி அரசு தொடக்கப்பள்ளி மாணவிகள், உலக சாதனை முயற்சிக்காக நடந்த சிலம்பம் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில், ஒரே நேரத்தில் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று தங்கள் தனித்திறமைகளை தொடர்ந்து 30 நிமிடங்கள் வெளிப்படுத்தும் உலக சாதனை முயற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். அதன்படி, திருவண்ணாமலை அடுத்த கொளக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவிகள் சி.லக்‌ஷிதா, கு.பவித்ரா ஆகியோர் கலந்துகொண்டு, தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்துள்ளனர். மேலும், வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகளில் இந்த இரு மாணவிகளும் பங்கேற்று ஏற்கனவே பல்வேறு பரிசுகளை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளை, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்