அரசு நிலத்தில் மண் அள்ளிய லாரி, 2 பொக்லைன் பறிமுதல்

கிருஷ்ணகிரி, டிச.28: கிருஷ்ணகிரி, போலுப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் வாசுகி மற்றும் வருவாய்த்துறையினர், கும்மனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள அரசு நிலத்தில், திருட்டுதனமாக லாரியில் மண்ணை ஏற்றிக்கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த டிப்பர் லாரி, 2 பொக்லைனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதனை குருபரப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய டிப்பர் லாரி, பொக்லைன் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்