அரசு ஊழியர் கூட்டம்

 

செங்கல்பட்டு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாணிக்க ஆண்டு மாநில பிரதிநிதித்துவப் பேரவை விழாவையொட்டி ஆயத்த கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாணிக்க ஆண்டு மாநில பிரதிநிதித்துவப் பேரவை வரும் அக்டோபர் 7ம் தேதி செங்கல்பட்டில் நடைபெற உள்ளது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற பல முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான ஆயத்த கூட்டம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பூங்குழலி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், மாவட்ட செயலாளர் முகமது உசேன் வரவேற்றார். சங்கத்தின் மாநில துணை தலைவர்கள் ஞானத்தமி, பெரியசாமி, பழனியம்மாள், கிரிஸ்டோபர், பரமேஸ்வரி, செல்வராணி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், செங்கல்பட்டு நகரில் மாணிக்க ஆண்டில் மாநில பிரதிநிதித்துவ பேரவையை சிறப்பாக நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் விக்டர்சுரேஸ்குமார் நன்றி கூறினார்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை