அரசு ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்டார்கள்: ஜாக்டோ – ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அரசு ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்டார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர்கள் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வருகிறது. அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடக்கும் இந்த மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். பேருரையாற்றுகிறார். கடந்த 1988ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் இந்த மாநாட்டில் முதல்வர் பங்கேற்பது இதுவே முதல் முறை. மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்ததற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காரணம். நீங்கள் தனி தீவு கிடையாது; நானும் உங்களில் ஒருவன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என தெரிவித்தேன். அரசு ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்டார்கள். அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் கொம்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். மற்ற மாநிலங்களை விட அனைத்து துறைகளிலும் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். துறை அமைச்சர்களிடம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள், நிச்சயம் தன கவனத்துக்கு வரும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர்; தற்காலிக பணியில் இருக்கும் ஆசிரியர்கள் 60 வயது வரை பணியை தொடரலாம். அக். 15 முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும். அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார். …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்