அம்பகரத்தூர் மது பாரில் தகராறு

 

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அடுத்த அம்பகரத்தூரில் தனியார் மது பார் உள்ளது. இங்கு திருவாரூர் மாவட்டம், ஏனய்குடி பகுதியை சேர்ந்த பிரவீன் குமார்(26) என்பவர் உணவு கேன்டீன் நடத்தி வருகிறார். பாருக்கு நேற்று முன்தினம் நடுகந்தன் குடியை சேர்ந்த சுரேஷ்(20), செட்டியார்(22) மற்றும் தினேஷ்குமார்(22) ஆகியோர் மது குடிக்க வந்துள்ளனர். அப்போது சுரேஷ் மது குடிக்க சைட்டிஷாக ஆம்பிளேட் கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார்.

பின்னர் சாப்பிட்ட ஆம்லெட்டுக்கு காசு கேட்ட கேன்டீன் உரிமையாளர் பிரவீன் குமாரை தகாத வார்த்தைகள் திட்டியும், சுரேஷ், செட்டியார் மற்றும் தினேஷ்குமார் ஆகிய 3 பேர் பிரவீன் குமாரை கேன்டீனுக்குள் புகுந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கேன்டீனில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மேசை, நாற்காலி ஆகியவற்றை அடித்து உடைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பிரவீன் குமார் அம்பாகரத்தூர் புற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்