அமுதுண்ணாக்குடியில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாத்தான்குளம், ஆக. 26: சாத்தான்குளம் அருகே ஓடை புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் இடித்து அகற்றினர். சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியில் கருமேனியாற்று ஓடை புறம்போக்கில் தனி நபர்கள் ஆக்கிரமித்து கட்டியுள்ளகாம்பவுண்ட் சுவர்கள் மற்றும் குடியிருப்புகளை அகற்ற வேண்டுமென வடக்கு அமுதுண்ணாகுடி செல்வகுரூஸ் என்பவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கருமேனியாற்று நீர்நிலை ஓடை புறம்போக்குகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து குடியிருப்புகளை அகற்றுவதற்கு முன்பு அந்த குடியிருப்பில் உள்ள தகுதியான 4 பேருக்கு சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா வேறு இடத்தில் இலவச வீட்டுமனை பட்டாவழங்கினார்.

தொடர்ந்து நேற்று மூலைக்கரைப்பட்டி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆவுடைநாயகம் தலைமையில் சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா முன்னிலையில் அமுதுண்ணாக்குடி ஓடை புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் மற்றும் காம்பவுண்ட் சுவர்கள் இடித்து அகற்றப்பட்டன. இதில் மூலைக்கரப்பட்டி நீர்வளத்துறை உதவி பொறியாளர் ரமேஷ்குமார், சாத்தான்குளம் வருவாய் ஆய்வாளர் பிரஷ்யா நிறையா, நில அளவையர் தேவிகா, சாத்தான்குளம் கிராம நிர்வாக அலுவலர் கந்தவள்ளி குமார், கிராம உதவியாளர் வள்ளிசுந்தரி மற்றும் போலீஸ் எஸ்ஐக்கள் ரத்தினராஜ், விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்