அனுமதியின்றி பாஜ பேனர் 2 பேர் மீது வழக்கு

சேத்துப்பட்டு, நவ.21: தேவிகாபுரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பஜார் வீதியில் தேவிகாபுரத்தை சேர்ந்த சரவணன், குமார் ஆகிய இருவரும் பாஜக சார்பில் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் அந்த பேனரை அகற்றி பறிமுதல் செய்து சரவணன் மற்றும் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்