அந்தியூரில் பேரூர் திமுக சார்பில் கலைஞர் உருவ படத்துக்கு எம்எல்ஏ மரியாதை

 

அந்தியூர், ஆக.8: ஈரோடு மாவட்டம், அந்தியூரிலுள்ள காந்தி மைதானத்தில் பேரூர் கழக செயலாளர் எஸ்.கே காளிதாஸ் தலைமையில் கலைஞரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், பேரூர் கழக துணை செயலாளர் ஏ.சி. பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மகாலிங்கம், கோஆப்டெக்ஸ் மாநில இயக்குனரும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளருமான எஸ்.பி.ரமேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் செபஸ்தியான், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சூரியபிரகாசம், முத்துநாதன், பொருளாளர் பிரகாஷ், முன்னாள் பேரூராட்சி வார்டு உறுப்பினர் செந்தில்குமார், மற்றும் வார்டு செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு கலைஞரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல, அந்தியூர் புதுப்பாளையத்தில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட அமைப்பாளர் நாகராஜ், சங்கராப்பாளையம் ஊராட்சி பகுதியில் ஊராட்சி தலைவர் குருசாமி தலைமையில் கலைஞரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்