அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 

ஊட்டி: நீலகிரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஒன்றியம், நகரம், பேரூர், சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் மணி, முன்னாள் எம்பி அர்சுணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது, மகளிர் குழு அமைப்பது, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் தோட்டத்தொழிலாளர் மாநில இணைச் செயலாளர் ஜெயராமன், ஊட்டி ஒன்றிய செயலாளர் பெள்ளி, குமார், கேத்தி பேரூராட்சி செயலாளர் கன்னபிரான், பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம் பாபு, மாவட்ட துணை செயலாளர் உஷா, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சத்தார், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பூத் கமிட்டிக்கு 19 பேரும், மகளிர் குழுக்களுக்கு 25 பேரும், இளைஞர் இளம் பெண் பாசறைக்கு 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் குழுவிற்கு 25 முதல் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும். பாசறைக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும் என மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் கேட்டுக் கொண்டார்.

Related posts

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்: சாத்தூரில் பரபரப்பு

சிவன் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு