அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

செங்கம் :  செங்கம் அடுத்த மேல் செங்கம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு கால்பந்து போட்டி, வாலிபால், கயிறு இழுக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாணவ மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.விளையாட்டு போட்டியை செங்கம் ஒன்றிய குழுத் தலைவர் விஜயராணி குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பக்கிரிப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவி  மல்லிகா தூது முனியன் மற்றும் ஆசிரியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எழிலரசன், விஜயலட்சுமி மற்றும் தூய்மை பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் முனுசாமி வரவேற்றார். முடிவில்  உதவி ஆசிரியர் ராஜலெட்சுமி நன்றி கூறினார்….

Related posts

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு: 150 பசுக்கள் மீட்பு; ம.பி போலீஸ் நடவடிக்கை

காரில் கடத்திய ₹2 கோடி தங்கம் 1 கிலோ வெள்ளி நகை பறிமுதல்