அண்ணா சாலையில் அஜித் குமார் படப்பிடிப்பு ரசிகர்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல்

சென்னை: போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் படம், ‘துணிவு’. அஜித் குமார், மஞ்சு வாரியர் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைக்கிறார். சென்னை அண்ணா சாலையிலுள்ள வங்கி ஒன்றில் கொள்ளை நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. வங்கியின் உள்ளே நடக்கும் காட்சிகள் அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது. இதன் வெளிப்புற காட்சிகளை மட்டும் அண்ணா சாலையில் படமாக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று அதிகாலை முதல் அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் முன்பு படப்பிடிப்பு நடந்தது. இதில் அஜித் குமார், மஞ்சு வாரியர் கலந்துகொண்டு நடித்தனர். அப்போது படப்பிடிப்புக்கு அஜித் குமார், மஞ்சு வாரியர் இருவரும் தங்கள் முகத்தை சின்ன துணியால் மறைத்துக் கொண்டு வந்தனர். காட்சி படமாக்கப்பட்டபோது மட்டும் தங்கள் முகத்தை மறைத்துஇருந்த துணியை நீக்கிவிட்டு நடித்தனர். காட்சி முடிந்ததும் மீண்டும் முகத்தை மூடிக்கொண்டனர். இதற்கிடையே அஜித் குமார் பட ஷூட்டிங் அண்ணா சாலையில் நடந்த தகவல் அறிந்து ஏராளமான ரசிகர்கள் கூடினர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். இதனால், அண்ணா சாலைபகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்