அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு சீர்காழியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

 

சீர்காழி, ஏப். 5:மயிலாடுதுறை மக்களவை தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடக்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்ைத விதிமுறை அமலில் இருந்து வருகிறது. சோதனைச்சாவடி மற்றும் பொது இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் கொள்ளிடத்தில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நேற்றுமுன்தினம் நடந்தது.

முக்கூட்டில் துவங்கிய பேரணிக்கு எஸ்பி மீனா தலைமை வகித்தார். ராணுவ படையை சேர்ந்த துணை கமாண்டர் காளிசரண் மாஜி தலைமையில் 70 துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் பங்கேற்ற பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று சீர்காழி தமிழிசை மூவர் மண்டபத்தில் நிறைவடைந்தது. பேரணியில் மயிலாடுதுறை ஏடிஎஸ்பி ஜெயக்குமார், சீர்காழி டிஎஸ்பி ராஜ்குமார், சீர்காழி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் 130 போலீசார் பங்கேற்றனர்.

Related posts

இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி

கல்லக்குடியில் ஆம்புலன்ஸ் மோதி முன்னாள் விஏஓ பலி

திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது