மனைவியின் நடத்தையில் சந்தேகம் மகனின் உடலில் சூடு வைத்த தந்தை
சென்னை: சென்னையில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு மகனின் உடலில் 19 இடங்களில் சூடுவைத்த ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஓட்டுநர் ராஜ்கண்ணன் என்பவர் தனது மனைவி குழந்தையுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் மனைவி மேல் சந்தேகம் கொண்டு அடித்து உடைத்ததாகவும் அதன் தொடர்ச்சியாக தோசை கரண்டியால்...
ராணிப்பேட்டை சோளிங்கர் அடுத்த தாளிக்கல் கிராமத்தில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தாளிக்கல் கிராமத்தில் குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். அமுதன் (10) சுதன் (8) உள்ளிட்ட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரிலே மூழ்கிய 3 பேரில் இருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ...
பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கலாம் என அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
சென்னை: 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கலாம் என அரசுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. நேரடி நியமனம் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர் வழக்கு நேரடி தேர்வு நடத்தி 2500 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணி நியமனம் செய்யப்படவில்லை. தங்களுக்கு 2 %...
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி! முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அவர்கள் விதித்துள்ள வரி காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் டாலர் சிட்டி திருப்பூர் தவிக்கிறது. குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இரஷ்ய கச்சா எண்ணெய்...
விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலமாக, 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்...
2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
சென்னை: 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. நேரடி நியமனம் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு சேரவேண்டிய 2%ஒதுக்கீடு வழங்காமல் மற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கக்கூடாது. நேரடி தேர்வு நடத்தி 2500 ஆசிரியர்கள்...
வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலி: பொது இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்
சென்னை: வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியாக சோதனைகளை தமிழக சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியது. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மழைக்கால நோய்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை பாதிப்புகளோடு அதிக மக்கள் பாதிக்கப்படுவதாகவும், சிகிச்சை சேர்வோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. தமிழ்நாடு முழுவதும்...
காட்டுப்பள்ளியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கியதில் 6 போலீசார் காயம்: ஆவடி காவல் ஆணையர்
திருவள்ளூர்: காட்டுப்பள்ளி துறைமுகத்தில் போராட்டத்தின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்குதலில் 6 போலீசார் காயம் அடைந்தனர் என ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமர் பிரசாத் பணிபுரிந்து வந்தார். நேற்று...
மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் முகக் கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
சென்னை : மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் முகக் கவசம் அணிய தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியாக சோதனைகளை தீவிரப்படுத்தியது தமிழக சுகாதாரத் துறை. மேலும் முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் பொது |நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்; காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனே...