கோவையில் தனிப்பட்ட பிரச்சினையில் பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
கோவை: கோவையில் தனிப்பட்ட பிரச்சினையில் கோவை காளப்பட்டி மண்டல பாஜக துணைத்தலைவர் அஜய்க்கு கையில் அரிவாள் வெட்டினர். காயமடைந்த பாஜக நிர்வாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.3.5 கோடி வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.3.5 கோடி வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 2500 கிலோ பீடி இலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வலிநிவாரணி மாத்திரை, பீடி இலைகளை பதுக்கி வைக்க பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்றவர்களை கடலோர காவல்...
தங்கையை கேலி செய்த கல்லூரி மாணவர் கொலை: 2 சிறுவர்கள் கைது
நாமக்கல்: நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மகாலெட்சுமி. இவரது மகன் மனோ (19), தனியார் கல்லூரியில், பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், மனோவின் சடலம் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தெலைவில் கடந்த 29ம்தேதி காலை கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குபதிந்து...
மதுரை மாநகராட்சி வரி வசூல் முறைகேடுபில் கலெக்டர் உள்பட மேலும் 2 பேர் கைது
மதுரை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூல் முறைகேடு தொடர்பாக ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ரங்கராஜன், வருவாய் அலுவலர் செந்தில்குமரன் உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்படி மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழுவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. சிறப்புக்குழு விசாரணையில் பெண் கவுன்சிலர் விஜயலட்சுமியின்...
இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 44 பேரிடம் ரூ.3.50 கோடி மோசடி: கணவன், மனைவி கைது
வேலூர்: இந்திய உணவு கழகமான எப்சிஐயில் வேலைவாங்கித்தருவதாக கூறி பெண் உட்பட 44 பேரிடம் ரூ.3.50 கோடி வரை மோசடி செய்த கணவன், மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அரும்பருதியை சேர்ந்தவர் மஞ்சுளா(45). இவரது மகள் லிகிதா. இவர் திருமணமாகி ஆந்திர மாநிலம் சித்தூரில் வசித்து வருகிறார்....
மதுரையிலும் ஒரு ரிதன்யா: வரதட்சணை கேட்டு கொடுமை இளம்பெண் தற்கொலை; கூடுதலாக 150 பவுன் கேட்டதாக பெற்றோர் புகார்
மதுரை: திருப்பூர் ரிதன்யா சம்பவம் போல், வரதட்சணை கொடுமையால் மதுரையில் இளம்பெண் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, செல்லூர் பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன் - தனபாக்கியம் தம்பதியின் மகன் ரூபன்ராஜ் (30). இவருக்கும், உசிலம்பட்டி பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த அக்னி - செல்வி மகள் பிரியதர்ஷினிக்கும் (28)...
காதல் திருமணம் குறித்து பேசுவதற்காக காதலி வீட்டிற்கு சென்ற இளைஞர் படுகொலை: பெண்ணின் தந்தை உட்பட 9 பேர் கைது
புனே: திருமணப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் வரவழைக்கப்பட்ட இளைஞர், பெண்ணின் உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் புனே அருகே நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த ராமேஸ்வர் கேங்கட் (26) என்ற இளைஞரும், அவரது உறவுக்காரப் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பிய...
நாடு முழுவதும் போலி நிறுவனங்கள் நடத்தி ஆன்லைன் மூலம் ரூ.203 கோடி மோசடி: கைதான 2 பேர் சிறையிலடைப்பு
புதுச்சேரி: நாடு முழுவதும் போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.203 கோடி மோசடி செய்த 2 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரியை சேர்ந்தவர் மகேஷ்குமார். அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதிநேர வேலைக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் மூலம் ரூ.4 லட்சத்து 68...
கிருஷ்ணகிரியில் தோஷம் கழிப்பதாக கூறி 6 மாத பெண் குழந்தையை கடத்திய இளம்பெண் கைது: ஓசூர் லாட்ஜில் பதுங்கியவர் சிக்கினார்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் ஈஸ்வரி(24). இவருக்கும் கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நாகேஷ் என்பவருக்கும், 3 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மற்றும் 6 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கர்நாடகாவில் உள்ள நெலமங்களாவில் செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வந்தனர். கடந்த சில...