வாடிக்கையாளர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால் சொமேட்டா லெஜண்ட்ஸ் சேவை நிறுத்தப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபேந்திர கோயல் அறிவித்துள்ளார். வேறு ஊர்களின் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் நோக்கில் 2 ஆண்டுகளுக்கு முன் ‘சொமேட்டா லெஜண்ட்ஸ்’ தொடங்கப்பட்டது. இதன்மூலம் சென்னையில் இருந்துகொண்டு ஹைதராபாத்தில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட முடியும். இதற்கான குறைந்தபட்ச விலை ₹5,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.