நாமக்கல்: நாமக்கல் தாலுகாவில் சோமாட்டோ, ஸ்விகிக்கு பதில் புதிய செயலியை ஓட்டல் உரிமையாளர்கள் தொடங்கி உள்ளனர். கடந்த 1ம் தேதி முதல் சோமாட்டோ, ஸ்விகிக்கு ஓட்டல் உரிமையாளர்கள் உணவு ஆர்டர்களை தரவில்லை. சோமாட்டோ, ஸ்விகி கமிஷன் தொகையை 35%லிருந்து 18%ஆக குறைக்க ஓட்டல் உரிமையாளர்கள் கோரியிருந்தனர். மறைமுக கட்டணம், விளம்பர கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியது. இந்த நிலையில், ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கையை சோமாட்டோ, ஸ்விகி ஏற்காத நிலையில் புதிய செயலி தொடக்கம் செய்யப்பட்டது.
சோமாட்டோ, ஸ்விகியை புறக்கணித்த ஓட்டல் சங்கம்..!!
0