புலவயோ: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கடந்த ஜூன் 28ம் தேதி துவங்கிய முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 9 விக்கெட் இழப்புக்கு 418 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின், முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே 251 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பின், 2வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்கா 369 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனால், ஜிம்பாப்வே வெற்றி பெற 537 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே வீரர்கள் சொதப்பலாக ஆடி 66.2 ஓவர் முடிவில் 208 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகினர். அதனால், 328 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா மெகா வெற்றி பெற்றது.