மதுரை : குமரியில் ஜீரோ பாய்ண்ட்டில் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த வழக்கில் மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. தேசியக் கொடியை தொடர்ந்து பராமரித்து களங்கம் ஏற்படாத வகையில் பறக்க விடுவதை நிர்வாகம் உறுதி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குமரி ஜீரோ பாய்ண்டில் 148 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை பறக்கவிட உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.