சென்னை: யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் சென்னை காவல்துறை விதித்தது. தலைக்கவசம் அணியாமல், சேதமடைந்த நம்பர் ப்ளேட் கொண்ட வாகனத்தை ஓட்டியதாக யூடியூபர் இர்பான் மீது புகார் எழுந்தது. போக்குவரத்து விதிகளை மீறியதாக எழுந்த புகாரை தொடர்ந்து ரூ.1,500 அபராதம் விதித்தனர். தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.1,000, நம்பர் ப்ளேட் சேதம் அடைந்திருந்ததால் ரூ.500 அபராதம் விதித்தனர்.