Friday, July 19, 2024
Home » கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

by Neethimaan

மதுரை: பெண் போலீசார் குறித்து தவறாக பதிவு செய்ததற்காக யூடியூபர் சங்கரை, தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது, கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் தங்கியிருந்த அறையில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்தது தொடர்பாக பழனிசெட்டிபட்டி போலீசார், சங்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிந்தனர்.பின்னர், கோவை சிறையில் இருந்த சங்கரை கஞ்சா வழக்கிலும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே சங்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் ஜாமீன் கோரி, சங்கர் மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தார். இதை நீதிபதி செங்கமலச்செல்வன் நேற்று விசாரித்து, அரசு தரப்பு வாதத்ைத ஏற்று சங்கரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

13 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi