திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த யூடியூபர் ஹேமாத்ரி. இவர் சமூக ஊடகங்கள் மூலம் இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்களுடன் அறிமுகமாகி, அவர்களுடன் நெருங்கி பழகி புகைப்படங்களை எடுப்பது வழக்கம். சில நாட்களுக்குப் பிறகு போட்டோவை வைத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். விசாரணையில் ஹேமாத்ரி பெண்களை மிரட்டி பாலியல்தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஹேமாத்ரியை கைது செய்து செய்தனர்.
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் கைது
0