சென்னை: சென்னையை சேர்ந்த பார்த்திபன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், குற்ற வழக்குகளில் யூடியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுகிறது. எனவே, யூ டியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, யூடியூப் நிறுவனத்தையும், ஒன்றிய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்று தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், வழக்கில் ஒன்றிய அரசை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
யூடியூப் சேனல்களை முறைப்படுத்த நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு
57