செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு புறவழிசாலையில் நேற்று முன்தினம் பொதுமக்களை 2 பேர் கத்தியை காட்டி மிரட்டுவதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு விரைந்த போலீசார், அவர்களை மடக்கி, பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர்கள் செங்கல்பட்டு தட்டான்மலை பகுதியை சேர்ந்த சுரேஷ் (35), பிரவின்குமார் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். இவர்கள் ஏற்கனவே கொலை வழக்கில் கைதானது குறிப்பிடத்தக்கது.