அகர்தலா: திரிபுரா முதல்வரை விமர்சித்ததற்காக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவரின் வீட்டை பாஜவினர் சூறையாடினர். அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திரிபுரா மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் ஷாஜகான் இஸ்லாம். சமீபத்தில் இவர் தனது பேஸ்புக் பதிவில் பல் மருத்துவரான மாநில முதல்வர் மாணிக் சாகாவை விமர்சித்துள்ளார்.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பணத்துக்காக நோயாளியின் பல்லை பிடுங்கி கொண்டிருந்தவருக்கு மாநில முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சாந்திபாராவில் உள்ள ஷாஜகானின் வீட்டுக்குள் 100க்கும் மேற்பட்ட பாஜ தொண்டர்கள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். அவரது குடும்பத்தினரையும் தாக்கினர்.