புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது வாட்ஸ்அப் சேனலில் கூறியிருப்பதாவது: நாட்டில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் தற்கொலை விகிதம் மிகவும் வருத்தமாகவும் கவலையாகவும் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில், 0-24 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகை 58.2 கோடியில் இருந்து 58.1 கோடியாக குறைந்துள்ள நிலையில், மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை 6,654ல் இருந்து 13,044ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இன்று அதிக இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்களுக்கு வசதிகள் வழங்கப்படுவதற்குப் பதிலாக சிரமங்களையும் நிர்பந்தங்களையும் எதிர்கொள்வது வருந்தத்தக்கது. நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் — பிரச்சனைகளுக்கு எதிராக உங்கள் குரலை எழுப்புங்கள், பயப்படாதீர்கள். உங்களுக்காக வீதிகளில் இருந்து நாடாளுமன்றம் வரை தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.