பெரும்புதூர்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாறன் (21). இவர், படப்பையில் தங்கி, ஒரகடம் சிப்காட்டில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி ஏரியில் மாறன், நண்பர்களுடன் குளித்தார். அப்போது, நீரில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்த படப்பை தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மூழ்கிய மாறனை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். இரவு நேரமாகியதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளாக நேற்று தேடும் பணி நடந்தது. பகல் 1 மணி அளவில் மாறன் உடல் மீட்கப்பட்டது. பின்னர், பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இளைஞர் சடலம் மீட்பு
0
previous post